கல்வி அமைச்சு பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கான புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தச் சுற்றறிக்கையானது அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்ட மட்ட பணிப்பாளர்கள், உதவிக் கல்வி பணிப்பாளர்கள் பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2016 ஏப்ரல் 29-இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களுக்கு மேலாக, புதிய சுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எந்தக் குழந்தையும் தண்டனையாகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ உடல் ரீதியிலும் மன ரீதியிலும் துன்புறுத்தப்படக்கூடாது எந்தவித உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது.
தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் மேலும், பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணும் போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.






3 Comments