அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (02) காலை 8 மணி முதல் நாளை (03) காலை 8 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது.
சட்டவிரோத இடமாற்றங்களுக்கு எதிராக, நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கம், கடந்த செவ்வாய்க்கிழமை ஒரேபோல 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. இருப்பினும், பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் இன்றும் இதே அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடருவததாக ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார் வேலைநிறுத்த காலத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.






3 Comments