பங்களாதேஷில் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று நாடு திரும்ப உள்ளனர். அவர்கள் கடந்த ஜூலை 16ஆம் தேதி “சுடு துவா 4” எனும் பலநாள் மீன்பிடி கப்பலில் கடலுக்கு புறப்பட்டபோது, கடல் எல்லையை மீறியதாகக் கூறி பங்களாதேஷ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் அவர்கள் சிட்டகாங் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், வெளிவிவகார அமைச்சின் ஆதரவும் பங்களாதேஷில் உள்ள இலங்கை தூதரகத்தின் இராஜதந்திர தலையீடும் காரணமாக அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் விடுவிக்கப்பட்ட அந்த மீனவர்கள் இன்று இலங்கைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments