கண்டியில் இன்று (ஏப்ரல் 2) நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி (Big Match) பார்க்க உந்துருளியில் சென்ற மாணவர் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கண்டி காவல்துறையின் தகவல்படி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பயணித்த இரண்டு மாணவர்கள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மற்றைய மாணவர் எவ்வித காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார் கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments