விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை, கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளில் உயிரிழப்பு, தொழில் இடையூறு அல்லது காணாமல் போவது போன்ற சம்பவங்களில் இத்திட்டம் நிதி உதவியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
12 இலட்சம் ரூபாய் இழப்பீடு – ஆண்டுக்கு 1,920 ரூ.
15 இலட்சம் ரூபாய் இழப்பீடு – ஆண்டுக்கு 2,550 ரூ.
20 இலட்சம் ரூபாய் இழப்பீடு – ஆண்டுக்கு 3,600 ரூ.
இந்த திட்டத்தின் மூலம் கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பொருளாதார எதிர்காலம் பாதுகாக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.






3 Comments