Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அரிசி பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஒழுங்குவிதிகள் – அரசு அறிவிப்பு !

அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை சமாளித்து விலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஒழுங்குவிதிகளை அறிவித்துள்ளது.

1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், “2026 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்” அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகளின் படி, GR 11, பொன்னி சம்பா, சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கு மாற்றான கிரி/பால் பொன்னி உள்ளிட்ட சில அரிசி வகைகளை இறக்குமதி செய்ய ‘இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம்’ பெறுவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஏப்ரல் 02 முதல் ஏப்ரல் 30 வரை கப்பலில் ஏற்றப்பட்ட அரிசி மட்டுமே இந்த சலுகைக்கு உட்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இறக்குமதியாளர் அதிகபட்சமாக 1,040 மெட்ரிக் தொன் வரை மட்டுமே அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி 2026 மே 31க்குள் இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ஒழுங்குவிதிகள் 2026 ஏப்ரல் 02 முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...