அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை அறிவிக்கத் தவறும் பட்சத்தில், அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து இன்று காலை 8 மணிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
மேலும், சுகாதார அமைச்சு இணக்கப்பாட்டின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதையடுத்து, அரச மருத்துவ அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சங்கம் மற்றும் அரசாங்கத்துக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட உள்ளன.






3 Comments