Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

புத்தாண்டு காலத்தில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இணையவழி நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள்அதிகரித்துள்ளதாகக் காவல்துறை பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு கால கொள்வனவுகளுக்காகப் பொதுமக்கள் அதிகளவில் இணையத்தைப் பயன்படுத்துவதைச் சாதகமாக்கிக்கொண்டு சைபர் குற்றவாளிகள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறை நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள புகார்களின் அடிப்படையில் நுட்பமான முறைகள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான புத்தாண்டு சலுகைகள் மற்றும் பரிசுகள் என்ற பெயரில் போலி விளம்பரங்கள் பகிரப்படுகின்றன உத்தியோகபூர்வமற்ற செயலிகள் அல்லது இணையதளங்களில் வங்கி விபரங்களை உள்ளிட வேண்டாம்

QR குறியீடு மோசடிகள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக முன்னெடுக்கப்படும் பிஷிங் தாக்குதல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு அடையாளங்களை மாற்றியமைத்தல்.

வங்கிகள் அல்லது வர்த்தக நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்களைப் போன்றே தோற்றமளிக்கும் போலித் தளங்கள் உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்கள் திருடப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களைப் பயன்படுத்தி இவ்வாறான மோசடித் திட்டங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் குறுக்கு வழியில் பணம் ஈட்டும் ஆசை காரணமாகப் பலர் இவ்வாறான வலையில் சிக்கிப் பணத்தை இழப்பதாகச் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையவழிப் பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்கள் அதீத அவதானத்துடன் இருக்குமாறு அந்நிய நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.

யாரேனும் ஒருவரின் தனிப்பட்ட விபரங்களையோ அல்லது வங்கித் தரவுகளையோ பகிரும் முன்னர் அந்த இணையதளம் அல்லது சலுகையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும்.

சமூக ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட இவ்வாறான இணையவழிக் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...