சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சகம் இடையே நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், நாட்டின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SMEs) எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில், கைத்தொழில் துறையை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது முக்கியம் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக உற்பத்தி துறையில் உள்ள தடைகளை நீக்குதல், ஏற்றுமதி செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் சூழலை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
மேலும், SMEs எதிர்கொள்ளும் நிதி மற்றும் செயற்பாட்டு சவால்களுக்கு தீர்வுகள் காண்பது தொடர்பிலும், அவற்றை ஆதரிக்கும் கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு செயல்முறையில் கைத்தொழில் துறையின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் என்பதையும் IMF தரப்பு அங்கீகரித்துள்ளது.






3 Comments