அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் டீசல் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றுடன் இணைந்த களஞ்சியசாலையில் டீசல் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், அந்த களஞ்சியசாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றிய 39 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சோதனையின் போது 22 பரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4,620,000 மில்லி லீட்டர் (4,620 லீட்டர்) டீசல் எரிபொருள் மீட்கப்பட்டதுடன், அவற்றின் மொத்த பெறுமதி 17 இலட்சத்து 64 ஆயிரத்து 840 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு தொடர்புடையவர்களை கண்டறிய கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சோதனை நடவடிக்கை கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிரிவு பொறுப்பதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழும் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






3 Comments