Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

இந்த ஆண்டில் இதுவரை அதிகமான விபத்துக்கள் பதிவு!

வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.

மரண விபத்துக்கள் ஒரு பேரழிவாக மாறியுள்ளன அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன ஒப்பிட்டுப் பார்த்தால் மரண விபத்துக்கள் 74 ஆல் அதிகரித்துள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆல் அதிகரித்துள்ளது வீதிகளின் தரம் கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

உயிரிழப்பவர்களில் அதிகமானோர் பாதசாரிகளாவர் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை 230 பாதசாரிகளும் 247 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே என குறிப்பிட்டார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...