பதுளை கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் நேற்று பிற்பகல் எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து மக்கள் எரிபொருளை சேகரிக்க முண்டியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி ஊர்தியில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினைக் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது ஊர்தி வீதியில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பிரதேச வாசிகள் கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் வந்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் சீர்செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






3 Comments