Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரூத்ன அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் அனுமதியுடன் மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் இந்த 2 நாட்களும் மதுபான விற்பனை இடைநிறுத்தப்படும்.

விடுமுறை காலப்பகுதியில் மதுவரி சட்டங்களை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் உரிமதாரர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனை அல்லது கடத்தல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும்.

பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தைக் கட்டுப்படுத்த காலி, அனுராதபுரம், கண்டி, குருநாகல் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் விசேட மதுவரி அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபான விற்பனை அல்லது கடத்தல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தைக் கட்டுப்படுத்த காலி, அனுராதபுரம், கண்டி, குருநாகல் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் விசேட மதுவரி அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...