மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் செங்கலடி பிரதேச செயலகம் முன்னர் இடம்பெற்றுள்ளது எனவும்.
செங்கலடி சந்தி பிரதான வீதி - சந்தியில் ஒன்றினைந்த இலுப்படிச்சேனை கிராம மக்கள் பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை சென்று செங்கலடி பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் செயலக வளாகத்துள்ளும் நுழைந்துள்ளனர்.
குளத்தை உடைப்பதை நிறுத்து அரச அதிகாரிகளே எமது பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் அரசே எமக்கு உதவு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






3 Comments