வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நாட்டில் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது தெரிவித்தார்.
நாட்டில் அரிசி உற்பத்தி தன்னிறைவு பெற்றுள்ளது அதற்கமைய மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 500 முதல் 7 ஆயிரம் வரையான மெட்ரிக் தொன் அரிசியே மக்களின் நுகர்வுக்கு தேவையாகவுள்ளது.
மாதத்துக்கு எமக்கு 2 இலட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியே தேவையாகவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் ஆனால் தற்போது நாட்டில் 30 இலட்சத்துக்கு அதிக மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கீரி சம்பா மற்றும் சம்பா போன்ற அரிசிகளுக்கு சிறிய தட்டுபாடு காணப்பட்டதாகவும் அமைச்சர் ஏற்றுக்கொண்டார் டிட்வா சூறாவளியினால் கீரி சம்பா உள்ளிட்ட விளைச்சல் பாதிக்கப்பட்டதுடன்
தற்போது கீரி சம்பா, பால் பொன்னி போன்ற அரிசி வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது இன்று முதல் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.






3 Comments