Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினால் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள மேலதிக மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த சில நாட்களில் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்படும் என அதன் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இரண்டாம் காலாண்டிற்காக கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் மின் உற்பத்திக்காக செலவிடப்படும் செலவினங்களைக் கருத்திற்கொண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குரிய மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையானது தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...