எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியை கருத்தில் கொண்டு மின்சாரத்தை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபை தலைவர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கை போன்ற நாடுகளுக்கு புதைபடிவ எரிபொருட்களை பெறுவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இரவு 6 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் மின்சார தேவை அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் தேவையற்ற மின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சமையல், துணி துவைத்தல், இஸ்திரி போன்ற பணிகளை பகல் நேரத்தில் மேற்கொள்ளுமாறும், விடுமுறை காலங்களில் சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை சிறப்பாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.






3 Comments