Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மாகந்துரே மதுஷ் கொலை வழக்கு: நான்கு அதிகாரிகள் கைது தற்காலிகமாக தடை !

பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜனக் நந்தன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளைக் கைது செய்வதைத் தற்காலிகமாகத் தடை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றிய குறித்த அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ இந்த இடைக்காலத் தடை உத்தரவை வழங்கினார்.

மனுதாரர்கள், மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும், அதனுடன் தொடர்பாக தாங்கள் எந்நேரமும் சட்டவிரோதமாக கைது செய்யப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, தங்களை கைது செய்வதைத் தடுக்க இடைக்கால உத்தரவு வழங்குமாறும், விசாரணையை ஷானி அபேசேகரவிடமிருந்து நீக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், கைது தடை உத்தரவையும் பிறப்பித்ததுடன், வழக்கை மீண்டும் மே 15 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கவும் உத்தரவிட்டது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...