Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கற்பிட்டியில் கடத்தப்பட்ட உலர்ந்த மஞ்சள் மீட்பு!

கற்பிட்டியின் பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இந்த மாதம் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி இரவு வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள விஜய கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான இரண்டு மூட்டைகள் சோதனையிடப்பட்டன இதன்போது சுமார் 80 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 07 ஆம் திகதி மாலை சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 16 மூட்டைகள் கண்டறியப்பட்டன.

அவற்றைச் சோதனையிட்ட கடற்படையினர் அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளைக் கைப்பற்றினர்.

இவ்வாறாக இரு தினங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...