Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மாலைத்தீவு ஜனாதிபதி மே மாதத்தில் இலங்கை விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதி மொதமேது முஇஸ்ஸ்க்கு அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் மற்றும் கடற்றொழில் துறையிலான புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

மாலைத்தீவு ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு இணையாக இரு நாடுகளினதும் கடற்றொழில் துறைகளுக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளினதும் கடற்றொழில் துறை சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் மாலைத்தீவின் புதிய மீன் வளங்களையும் இலங்கையின் வளர்ச்சியடைந்த தகரத்திலடைக்கப்பட்ட மீன் கைத்தொழிலையும் ஒன்றிணைத்து புதிய உற்பத்திகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துச் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக மாலைத்தீவுச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்குள் மீன் பதப்படுத்துதல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளைத் தயாரிப்பது தொடர்பில் இரு தரப்பினரும் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

தற்போது Made in Sri Lanka முத்திரையுடன் கூடிய சில உற்பத்திகள் டுபாய் சந்தை ஊடாக மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவ்வாறான உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக இலங்கையிலிருந்து மாலைத்தீவிற்குப் பெற்றுக்கொள்வதற்கான முறையொன்றை வகுப்பது குறித்தும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...