Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

7 பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர சிறைக்கு இடமாற்றம்!

பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஏழு பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று குறித்த கைதிகள் வெலிசர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர கூறியுள்ளார்.

இடமாற்றப்பட்டவர்களில் வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, லொகு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத் மற்றும் மன்னா ரமேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகள் உள்ளடங்குகின்றனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்தவாறு இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை வழிநடத்தியதாக கிடைத்த தகவல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையானது விசேட பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த சிறைச்சாலையின் முதலாவது கைதிகள் குழுவாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...