இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மே 8 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியற் கல்லூரிகளில் இந்த நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது.
2023 மற்றும் 2024 உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கே இந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.






3 Comments