Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

1ஆம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

தரம் 1 பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மேலதிகமாகத் தேவைப்படும் பயிற்சிகளை எதிர்வரும் மே 16 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தரம் 1 இன் முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் காணப்படின் எதிர்வரும் இரண்டாம் தவணையில் அந்தப் பாடப்பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நாலக கலுவெவ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...