கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இன்று பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் இன்று பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக இன்றைய தினம் தமது அலுவலகங்களுக்கு வருகைதர வேண்டாம் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை ஒன்றினூடாக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.






3 Comments