ராகம பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் வைத்து பெண் ஒருவரைத் தாக்கி அவரது தலைமுடியை வெட்டி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ராகம காவல்துறையினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறித்த பெண் கொடூரமான முறையில் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செயற்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதுடன் அவரை மருத்துவப் பரிசோதனைகளுக்காக ராகம போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் ராகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் இராஜங்கனை கடவத்த ராகம மற்றும் திருகோணமலை சீனக்குடா ஆகிய இடங்களைச் சேர்ந்த 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments