Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் மீட்பு!

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை மெரைன் பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடல் மார்க்கமாகப் பொருட்கள் கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் புதுமடம் மெரைன் பொலிஸாரும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் வாகனமொன்றிலிருந்து மூட்டைகளை இறக்கிப் பதுக்கிக் கொண்டிருந்த கும்பலை பொலிஸார் சுற்றி வளைத்தனர் இதைக் கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோடிய நிலையில் ஒருவரை மட்டும் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

அங்கிருந்த 35 சாக்கு மூட்டைகளைச் சோதனை செய்தபோது, அவற்றில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைதானவர் புதுமடம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை மெரைன் பொலிஸார் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெரைன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...