சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காணொளியின் அடிப்படையில் பெண்ணொருவரை மட்டையால் கொடூரமாகத் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பெண்ணொருவரை மட்டையால் கொடூரமான முறையில் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர நேற்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர் .
பட்டாசு வெடிக்கும் சத்தம் காரணமாக தனது வீட்டு நாய்கள் அசௌகரியத்திற்கு உள்ளானதாகத் தெரிவித்ததால் குறித்த நபர் அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பின்னர் மட்டையால் மிக மோசமாகத் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






3 Comments