மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று 22.04.2025 இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் இந்த சுற்றுலா விடுதியில் பணியாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தில் பல வெட்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணகைளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments