Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எரிபொருள்!

ரஷ்ய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதால் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எரிபொருளைக் கொள்வனவு செய்யும் சாதகமான சூழல் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உடன்படிக்கைகளின் கீழ் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் நிலக்கரியை வழங்க ரஷ்யா ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதையும் அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஆரம்பமான பிறகு இலங்கைக்கு மசகு எண்ணெயை ஏற்றி வந்த முதலாவது கப்பலான தேஷ் மகிமா நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்திய கப்பல் கழகத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 97,500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை எடுத்து வந்துள்ளது.

இந்த எரிபொருள் கையிருப்பு சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து மற்றுமொரு எரிபொருள் கப்பலும் இலங்கையை நோக்கிப் பயணத்தைத் ஆரம்பித்துள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...