Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சித்திரைப் புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயம்!

ஆணமடுவ கரம்பேவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புத்தாண்டு விழாவிற்கு வருகை தந்திருந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய பகைமை காரணமாக இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அது கைகலப்பாக மாறியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது காயமடைந்தவர்கள் ஆணமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த மோதலில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 20 பேர் வரை ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...