தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் நீராடச் சென்றிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது சடலங்கள் மரண பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.






3 Comments