அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களின் பின்னர் எங்களுடைய அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது 30 ஆயிரம் புதிய அரச ஊழியர்களின் அரச துறைக்குள் உள்ளெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். விண்ணப்பங்கள் கோரப்படும் போது, அதற்கு விண்ணப்பித்து, பரீட்சை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்று அரச சேவைக்குள் உள்நுழைய முடியும்
சிறந்த ஆளுமையுள்ள அரச ஊழியர்களை அரச துறைக்குள் உள்வாங்க நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்.
இதேவேளை, பல வருடங்களின் பின்னர் எமது அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்ற எமது வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.






3 Comments