உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு சஹ்ரான் ஹாசீம் தரப்பு மட்டும் முழு பொறுப்பாக இருக்க முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் கடும்போக்குவாத இயக்கம் மட்டுமே பொறுப்பு என கூறி உண்மையை மறைக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்தியவர்கள் சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவை விட உயர்ந்த மட்டத்திலிருந்தும் இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதல்களுக்கு இராணுவ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு இருப்பதாக சில சான்றுகள் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பல அறிக்கைகள் மற்றும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவற்றில் சிலர் முக்கிய சூத்திரதாரிகள் பற்றி குறிப்பிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உண்மையான குற்றவாளிகள் முழுமையாக வெளிப்படும் வரை எந்த முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.






3 Comments