இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக நேற்று (20) அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், இலங்கைக்குத் திரும்ப விரும்பும் அகதிகளுக்கான நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆதரவு கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கு திரும்ப விரும்பும் ஒரு இளைஞர் மேற்கொண்ட போராட்டம் குறித்த காணொளியும் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இளைஞரின் மீள் வருகைக்கான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அதேபோன்று தாயகம் திரும்ப விரும்பும் ஏனைய அகதிகளுக்கும் தேவையான நடைமுறைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






3 Comments