Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நாமல் கருத்து!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்தல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தாக்குதல்களுக்கு நிதியளித்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் இச் சந்தர்ப்பத்தில் ஏனையவர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்ட போதும் ஒரு தனிப்பட்ட கொலை வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளை நடத்துபவர்களின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் தாக்குதல்களுடன் ராஜபக்ஷ குடும்பத்தைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை நாமல் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு அதிகாரிகளிடம் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...