இலங்கை நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் ஓட்டங்கள் நிறைந்த ஒரு தீவு என்பதால், சுற்றுலாத் துறையையும் நகர்ப்புற பயணிகள் போக்குவரத்தையும் மேம்படுத்த,வாய்ப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, நாட்டுக்குள்ளே இருக்கும் நீர் ஓட்டங்கள் மற்றும் கடற்கரையைப் பயன்படுத்தி பல பகுதிகளை உள்ளடக்கிய படகு சேவையை ஆரம்பிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஹமில்டன் எலா, பேரே வாவி தியவன்ன ஓயா மற்றும் மது காகா போன்ற சாத்தியமான நீர் வளங்களைப் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்மொழியப்பட்ட குறித்த திட்டங்களை, பொதுதனியார் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்துவதற்கும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.






3 Comments