இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழு, அமெரிக்கா வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம்–உலக வங்கி வசந்த கூட்டங்கள் 2026-இன் ஒரு பகுதியாக சர்வதேச முதலீட்டாளர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜே.பி.மோர்கன், ஜெஃப்ரீஸ் மற்றும் எச்.எஸ்.பி.சி போன்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்த முதலீட்டாளர் சந்திப்புகளில் தூதுக்குழு பங்கேற்றது. மேலும் அமெரிக்க வர்த்தக சபை நடத்திய தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடனும் சந்திப்புகள் நடைபெற்றன.
நந்தலால் வீரசிங்க, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்ததுடன், முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இதனுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா–இலங்கை வர்த்தக செயற்பாட்டு குழுவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.






3 Comments