Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பொலிஸ் அதிகாரியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு!

பத்தேகம பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்த பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுகால நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தினால் நேற்று இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பத்தேகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி ஒரு ஆண் பிரதிவாதி மற்றும் மூன்று பெண் பிரதிவாதிகளுக்கு எதிராக பத்தேகம பொலிஸாரால் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நான்காவது பிரதிவாதிக்கு மரண தண்டனையும் ஏனைய மூவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதவான் ருசிர வெலிவத்த உத்தரவிட்டார்.

பத்தேகம காமிங்கல மார்க சதி மாவத்தையைச் சேர்ந்த மெரெஞ்சி கங்கானம்கே பிரசாத் மனோரஞ்சன என்ற களுத்துறை சூட்டி என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்டவர்களில் இரண்டாவது பிரதிவாதியான குணத்திகொட லீலாவதி என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், பத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திலீப் குமாரசிங்க 15615 மற்றும் ஜகத் நந்தன 50472 ஆகிய இரு அதிகாரிகளும் சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர்.

அங்கு, பலாபிட்டிய ரந்தொம்பே பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் திலீப் குமாரசிங்க 15615 என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் பிரதிவாதி மற்றும் மூன்று பெண் பிரதிவாதிகளுக்கு எதிராக பத்தேகம பொலிஸாரால் பலாபிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதி வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...