2026 ஆம் ஆண்டுக்கான அரச விசாக பூரணை தினத்தை முன்னிட்டு மே மாதம் 31 ஆம் திகதி அரச விசாக பூரணை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச விசாக பூரணை உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அதனை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னதாக மே மாதம் 2 ஆம் திகதிக்காக அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க இவ்வாண்டுக்கான விசாக பூரணை வாரம் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments