Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

நிதி அமைச்சு சைபர் தாக்குதல்: $2.5 மில்லியன் திருட்டு விசாரணைக்கு அவுஸ்திரேலியா உதவி !

இலங்கையின் நிதி அமைச்சின் கணினி முறைமைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சைபர் குற்றச்செயலில், சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் உதவி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக கான்பெர்ராவில் உள்ள அதிகாரிகள் இலங்கையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிதி, அவுஸ்திரேலியாவுக்கு செலுத்தப்பட வேண்டிய இருதரப்பு கடன் திருப்பிச் செலுத்தும் தொகையின் ஒரு பகுதியாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் 2025 இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த பரிவர்த்தனை இடம்பெற்றதாகவும், ஜனவரி மாதத்தில் அந்த நிதி திசைதிருப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, பணம் செலுத்தப்பட்ட பின்னர் சைபர் குற்றவாளிகள் தலையிட்டு அந்த நிதியை வேறு கணக்குகளுக்கு மாற்றியதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் டக்வொர்த், சம்பவம் குறித்து அவுஸ்திரேலியா முழுமையாக அறிந்துள்ளதாகவும், இலங்கையின் விசாரணைக்கு உதவி வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, இந்த சம்பவம் இரு நாடுகளின் நிதி உறவுகள் மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஒத்துழைப்பை பாதிக்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தற்போது பல்வேறு விசாரணை அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த சைபர் தாக்குதல் குறித்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...