கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த உளவுத்தகவலின் அடிப்படையில் நேற்று இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் எனவும், அவர்களில் இளம் பௌத்த பிக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்கும் இளையவர்கள் என்றும் கூறப்படுகிறது.
விசாரணையில், இவர்களுக்கு ஒரு நபர் மூலம் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும், வெளிநாட்டில் இருந்தபோது சந்தேகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாடசாலை பொருட்கள் மற்றும் இனிப்புப் பொருட்கள் உள்ள பெட்டிகளாக மாற்றி, அதற்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொத்தப் போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.






3 Comments