Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மாகாணசபை தேர்தலுக்காக வடக்கும் தெற்கும் கைகோர்ப்பு !

யாழ்ப்பாணம் நடைபெற்ற சந்திப்பில்மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வடக்கும் தெற்கும் சேர்ந்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் பங்கேற்க வந்த ஜி.எல்.பீரிஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டிற்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாதது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டது.

அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணசபை முறைமையை முழுமையாக செயல்படுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், இதற்காக இணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...