அஞ்சல் ஊழியர்கள் சிலர் முறையற்ற விதத்தில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை மேலதிக நேரக் கொடுப்பனவாக பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
2025ஆம் ஆண்டு சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அஞ்சல் மா அதிபர் மேற்கொண்ட தணிக்கை விசாரணைகளில், விரல் அடையாளப் பதிவு இன்றி ஊழியர்கள் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தேவையற்ற ஊழியர்களின் பெயர்களைச் சேர்த்து வேலை நேரத்தை செயற்கையாக அதிகரித்து நிதி கோரப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளைத் தடுக்க வருகைப் பதிவுக்கான விரல் அடையாள அமைப்பை அறிமுகப்படுத்த அரசு முயன்றபோது, அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச நிதி பயன்படுத்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments