Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

டீசல் இறக்குமதியிலும் மோசடி ஊழல் விசாரணை முறைப்பாடு தாக்கல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டின் ஊடாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கோரி உரிய ஆவணங்களைப் பரிசோதித்து பாரிய நஷ்டம் அல்லது மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.

அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் கோரியுள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...