சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பலில் உள்ள இலங்கை மாலுமியை பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
சோமாலிய அதிகாரிகளுடன் இணைந்து, குறித்த இலங்கை மாலுமியை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகில் பயணித்த எரிபொருள் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்தக் கப்பலில் இலங்கையர் ஒருவருடன் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளும் பணியாற்றி வந்துள்ளனர்.
இதுவரை கப்பலில் உள்ள பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாக உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை இந்நிலையில் கப்பலுடன் தொடர்பு கொண்டு மாலுமிகளின் தற்போதைய நிலையை மதிப்பிடவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.






3 Comments