கொழும்பில் இன்று நடைபெறவுள்ள சமாதானத்திற்கான நடைபயணம் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பொரளை பகுதி மற்றும் அதனை அண்மித்த வீதிகள் தேசிய நூலக வீதி ஊடாக கங்காராம விஹாரை வரை உள்ள பகுதிகளில் இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வு, சுதந்திர சதுக்கம் வளாகத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு விசேட நிகழ்வுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.00 மணி முதல் நிலைமையைப் பொருத்து கொழும்பு நகரிலும் நடைபயணம் நடைபெறும் பிரதான வீதிகளிலும் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ வாய்ப்புள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






3 Comments