Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

வெலிக்கடை சிறை மோதல் 2 கைதிகள் உயிரிழப்பு !


வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்தமை தொடர்பாக சிறைச்சாலை தலைமை அதிகாரி ஒருவரும் பெண் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (27) காலை 11 மணியளவில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்கள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற சிறைக்காவலருடன் ஏற்பட்ட மோதலின் போது இருவரும் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய கைதி மற்றும் சிறை அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த இரண்டாவது கைதியும் உயிரிழந்துள்ளார்.

எனினும், மரணங்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கைதிகள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், பொரளை பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர புலனாய்வு நடைபெற்று வருகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...