மொரவெவா பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது மொரவெவா பகுதியில் உள்ள யாயா 6 பிரதேசத்தில் பயிரிடப்பட்ட நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார கம்பி வேலியால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில், 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணைகளில், குறித்த நிலப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் மொரவெவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments