முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனக்கு தாக்குதலுக்கு முன்பே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், அப்போது அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த நிலந்த ஜயவர்தனக்கும் இந்த தகவல்கள் தெரிந்திருந்ததாகவும், அவை சரியாக கையாளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக, இலங்கை உயர் நீதிமன்றம் 2023 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. அதே வழக்கில் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் 50 மில்லியன் ரூபா இழப்பீடு விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த வழக்கில் விசாரணைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த புதிய சாட்சியங்கள் தாக்குதலுக்கு முன்பே எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் அவை சரியாக பயன்படுத்தப்படாததைக் குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்புகின்றன.






3 Comments