இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டம் தொடர்பாக மக்கள் போராட்ட இயக்க செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுவதாவது, இந்த திட்டத்தில் இந்தியா வழங்கப்பட்டுள்ள பங்கு, இலங்கையின் சுயாதீன முடிவெடுக்கும் அதிகாரத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இது தேசிய தரவுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு தலையீடு குறித்த தீவிர கவலைகளையும் உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மின்னணு அடையாள அட்டை திட்டத்திற்காக இதுவரை சுமார் 5.6 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் வெறும் 600 மில்லியன் ரூபாயில் மென்பொருள் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், இலங்கை தனது தேசிய அடையாள அமைப்பு மற்றும் மக்களின் தரவுகள் மீது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த திட்டம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






3 Comments